/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரவில் ஒளிராத தெருவிளக்குகள் பகலில் ஒளிர்வதால் அதிருப்தி
/
இரவில் ஒளிராத தெருவிளக்குகள் பகலில் ஒளிர்வதால் அதிருப்தி
இரவில் ஒளிராத தெருவிளக்குகள் பகலில் ஒளிர்வதால் அதிருப்தி
இரவில் ஒளிராத தெருவிளக்குகள் பகலில் ஒளிர்வதால் அதிருப்தி
ADDED : ஆக 12, 2025 08:14 PM

வால்பாறை; வால்பாறையில், இரவு நேரத்தில் எரியாத தெருவிளக்குகள், பகல் நேரத்தில் எரிவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், நகராட்சி சார்பில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, உயர்கோபுர மின்விளக்கும் அதிகளவில் அமைத்துள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை நகரில் பெரும்பாலான தெருவிளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால், மக்களும், சுற்றுலா பயணியரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், நேற்று பகல் முழுவதும் வால்பாறை நகரில் தெருவிளக்குகள் எரிந்தன. இரவில் எரிய வேண்டிய மின்விளக்கு பகலில் எரிவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மின் ஆற்றல் தான் வீணாகும் என, மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில், இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சிறுத்தை நடமாட்டம் மிகுந்த வால்பாறை நகரில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரியாததால் அச்சமாக உள்ளது,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தெருவிளக்குகளுக்கு 'டைமர்' பொருத்தாததால், இரவில் எரிய வேண்டிய மின்விளக்கு பகலில் எரிகின்றன. இதை உடனடியாக மாற்றி, வழக்கம் போல் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

