/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு பாட புத்தகங்கள் வினியோகம்

ADDED : ஜூலை 02, 2025 11:38 PM

கோவை; கோவை மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 83 ஆரம்பப்பள்ளிகள் என மொத்தமாக 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், ஏற்கனவே 19 பள்ளிகளில் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் (2025-26) மேலும் 51 துவக்கப்பள்ளிகள் மற்றும் 8 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம், 59 பள்ளிகளில் இவ்வகுப்புகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
இதில், எல்.கே.ஜி.,- 1,133 மற்றும் யு.கே.ஜி., -1,353 என 2,486 மாணவர்கள் படிக்கின்றனர். இம்மாணவர்களுக்கு, மாநகராட்சி கல்வி நிதி வாயிலாக, இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, சீரநாயக்கன்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளில் பயிலும் 43 மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் மற்றும் வரைபடம் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய, இரண்டு புத்தகங்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர கல்வி அலுவலர் தாம்ப்சன், கோவை எம்.பி., ராஜ்குமார், கல்விக்குழுத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்பள்ளியை தொடர்ந்து, மாநகராட்சியின் பிற பள்ளிகளிலும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.