/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கூடைப்பந்து :மாணவர்கள் அசத்தல்
/
மாவட்ட கூடைப்பந்து :மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜன 09, 2024 12:26 AM

கோவை;டெக்சிட்டி கூடைப்பந்து அறக்கட்டளை சார்பில் நடக்கும் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில், மாணவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டெக்சிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில், '17வது ஸ்ரீ தேவராஜூலு நினைவு கோப்பைக்கான' ஆணகள் கூடைப்பந்து போட்டி மற்றும் மாணவ மாணவியருக்கான முதலாம் ஆண்டு 'கோட் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் கோப்பை' போட்டி, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கோவை மாவட்ட கூடைப்பந்து சங்க மைதானத்தில் ஜன.,5ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள் பிரிவில் 25 அணிகள், மாணவர் பிரிவில் 12 அணிகள் மற்றும் மாணவியர் பிரிவில் 10 அணிகள் பங்கேற்று, நாக் அவுட் முறையில் போட்டியிடுகின்றன.
மாணவர் பிரிவு
சுகுணா பிப்ஸ் பள்ளி அணி 30 - 9 என்ற புள்ளிக்கணக்கில் பீபாள் பள்ளியையும், பி.எஸ்.ஜி., சர்வஜனா பள்ளி அணி 50 - 11 என்ற புள்ளிக்கணக்கில் பேசினேட்டிங் யூத் அணியையும், பெர்க்ஸ் பள்ளி அணி 61 - 38 என்ற புள்ளிக்கணக்கில், பாரதி பள்ளி அணியையும் வீழ்த்தியது.
மாணவியர் பிரிவு
ஒய்.எம்.சி.ஏ., அணி 61 - 10 என்ற புள்ளிக்கணக்கில் அல்வேர்னியா கிளப் அணியையும், அல்வேர்னியா பள்ளி அணி, 78 - 10 என்ற புள்ளிக்கணக்கில் விஷ்வதீப் அணியையும், பாரதி அணி 67 - 24 என்ற புள்ளிக்கணக்கில் ஆதித்யா பப்ளிக் பள்ளியையும், எஸ்.வி.ஜி.வி., பள்ளி அணி 28 - 20 என்ற புள்ளிக்கணக்கில், சுகுணா பிப் அணியையும் வீழ்த்தின.