/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கால்பந்து போட்டி: அக்சயா அகாடமி முதலிடம்
/
மாவட்ட கால்பந்து போட்டி: அக்சயா அகாடமி முதலிடம்
ADDED : அக் 28, 2024 05:59 AM

கோவை : கோவை அக்சயா அகாடமி சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் உள்ள, கால்பந்து டர்ப் மைதானத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. அக்சயா கல்விக் குழுமத்தின் நிறுவனர் புருசோத்தமன், போட்டிகளை துவக்கிவைத்தார்.
தடாகம் போலீஸ் எஸ்.ஐ., ஜெயப்பிரகாஷ், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பிஷப் மெட்ரிக் பள்ளி, நவபாரதி பள்ளி, சைதன்யா பள்ளி, விவேகம் பப்ளிக் பள்ளி, சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி, டாக்டர் தசரதன் இன்டர்நேஷனல் பள்ளி, கேம்போர்ட் இன்டர்நேஷனல் பள்ளி, எஸ்.என்.எஸ்., அகாடமி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
முதலாம் இடத்தை கோவை அக்சயா அகாடமி பள்ளி மாணவர்களும், இரண்டாம் இடத்தை அன்னுார் நவபாரதி நேஷனல் பள்ளி மாணவர்களும் பெற்றனர். சிறந்த ஆட்டநாயகனாக செல்வன் சாய் சஞ்சீத், சிறந்த கோல் கீப்பராக அபினவ், சிறந்த டிபெண்டராக ரட்ஷன் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு, புருசோத்தமன் பரிசுகள் வழங்கினார். பள்ளியின் தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராம், முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.