/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவிலான செஸ் போட்டி; அசத்திய இளம் வீரர், வீராங்கனை
/
மாவட்ட அளவிலான செஸ் போட்டி; அசத்திய இளம் வீரர், வீராங்கனை
மாவட்ட அளவிலான செஸ் போட்டி; அசத்திய இளம் வீரர், வீராங்கனை
மாவட்ட அளவிலான செஸ் போட்டி; அசத்திய இளம் வீரர், வீராங்கனை
ADDED : ஜூன் 30, 2025 10:52 PM

கோவை; மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், 75 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட அளவிலான செஸ் போட்டி கிணத்துக்கடவு அக் ஷயா இன்ஜி., கல்லுாரியில் நடந்தது. கோவை மாவட்ட செஸ் சங்கம் இணைந்து நடத்திய இப்போட்டியில், 9, 12, 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 'ஓபன்' பிரிவுகளில், 270 வீரர்கள் பங்கேற்றனர்.
ஆறு சுற்றுக்களாக நடந்த போட்டிகளில், இளம் வீரர்கள் அபாரமாக விளையாடினர். நான்கு பிரிவுகளிலும், 75 பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரர்கள், 15 பேர், வீராங்கனைகள், 10 பேர் என, 25 பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
தவிர, 55 வயதுக்குட்பட்ட சிறந்த மூத்த வீரர் மற்றும், 18 வயதுக்குட்பட்ட சிறந்த வீராங்கனைக்கும் சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டன.
கல்லுாரி தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செஸ் சங்க செயலாளர் தனசேகர் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.