/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வட்டார அளவிலான கோ -கோ போட்டி; வாகை மேல்நிலை பள்ளி சாம்பியன்
/
வட்டார அளவிலான கோ -கோ போட்டி; வாகை மேல்நிலை பள்ளி சாம்பியன்
வட்டார அளவிலான கோ -கோ போட்டி; வாகை மேல்நிலை பள்ளி சாம்பியன்
வட்டார அளவிலான கோ -கோ போட்டி; வாகை மேல்நிலை பள்ளி சாம்பியன்
ADDED : ஆக 12, 2025 08:10 PM

கருமத்தம்பட்டி; சூலுார் வட்டார அளவிலான எறிபந்து மற்றும் கோ கோ போட்டியில், வாகராயம்பாளையம் மேல்நிலைப்பள்ளி அணியினர் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.
சூலுார் வட்டார அளவிலான கோ - கோ போட்டியில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், வாகராயம்பாளையம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணியினர் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றனர். மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட அந்த அணியினர் தகுதி பெற்றனர்.
இதேபோல், வட்டார அளவிலான எறிபந்து போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் அணியினர் இறுதி போட்டியில் வென்று, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். இதே போட்டியில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பெண்கள் அணியினர் இரண்டாம் இடம் பெற்றனர்.
சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த அணியினரை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.