தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தீபாவளி சமையலுக்கு...! காய்கறி தொகுப்பு வினியோகம்

தீபாவளி சமையலுக்கு...! காய்கறி தொகுப்பு வினியோகம்

தீபாவளி சமையலுக்கு...! காய்கறி தொகுப்பு வினியோகம்


UPDATED : நவ 06, 2026 07:08 PM

ADDED : நவ 05, 2026 05:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:08 PM ADDED : நவ 05, 2026 05:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வால்பாறை கூட்டுறவு சிறப்பாங்காடியில் சிறப்பு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, ரேஷன் கடைகளில் மலிவு விலையில் சன்னரக ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் சிறப்பு காய்கறி தொகுப்பு வழங்கும் பணி நடக்கிறது. வால்பாறை நகரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 100 ரூபாய் மதிப்பிலான உருளைக்கிழங்கு, தேங்காய், பீன்ஸ், கேரட், பச்சைமிளாய், வெங்காயம், எலுமிச்சை, தக்காளி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.

சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி மேலாளர் அன்பழகன் கூறுகையில், ‘‘வால்பாறை தாலுகாவில் மொத்தம் உள்ள, 47 ரேஷன் கடைகளில், 16,558 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் காய்கறி தொகுப்பு வழங்கப்படும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us