/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
களை கட்டியது தீபாவளி விற்பனை: விழாக்கோலம் பூண்ட நகரம்
/
களை கட்டியது தீபாவளி விற்பனை: விழாக்கோலம் பூண்ட நகரம்
களை கட்டியது தீபாவளி விற்பனை: விழாக்கோலம் பூண்ட நகரம்
களை கட்டியது தீபாவளி விற்பனை: விழாக்கோலம் பூண்ட நகரம்
ADDED : அக் 17, 2025 11:18 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட, புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க திரண்டதால், நகர ரோடுகளில் மக்கள் நெரிசல் அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இரு நாட்களே உள்ள நிலையில், உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பொதுமக்கள், பண்டிகையை கொண்டாட தயாராகும் வகையில், புத்தாடைகள், இனிப்பு, பலகாரங்கள், பட்டாசுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இதனால், ரோடுகளில் மக்கள் நெரிசல் அதிகளவு காணப்படுகிறது. அதே போல், தீபாவளி பண்டிகையில் பிரதானமாக உள்ள பட்டாசு கடைகளிலும், விற்பனை களை கட்டியுள்ளது.
நடப்பாண்டு ஏராளமான புது ரக பட்டாசுகள் வந்துள்ளதால், பட்டாசு கடைகளிலும் விற்பனை ஜோராக நடக்கிறது. மேலும், இனிப்பு, பலகார கடைகளிலும், மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வீட்டு உபயோக பொருட்கள், மொபைல்போன்கள் வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், அந்த கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
பண்டிகை நெருங்கி வருவதால், பிரதான ரோடுகளில் போலீசார் வாகன போக்குவரத்தை நிறுத்தி, பொதுமக்களை மட்டுமே அனுமதிப்பதோடு, பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். உடுமலை ரோடுகள் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
பொள்ளாச்சி ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை சிறப்பாக கொண்டாட, பொதுமக்கள் துணி மற்றும் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அதில், துணிக்கடைகளில் பொதுமக்கள் அதிகளவு வருவதால் கூட்ட நெரிசலாக உள்ளது.
ஏழை, எளிய மக்களுக்காக ரோட்டோரத்தில், ரெடிமேடு ஆடைகள், பெண்களுக்கான அணிகலன்கள், காலணிகள் விற்பனை களைகட்டியுள்ளது.
காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருடர்களிடம் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க, போலீசார் ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.