/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட்டீஸ்களை கவரும் புதுப்புது பட்டாசு ரகங்கள்
/
குட்டீஸ்களை கவரும் புதுப்புது பட்டாசு ரகங்கள்
ADDED : அக் 17, 2025 11:19 PM

பொள்ளாச்சி: தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு, புத்தாடைகள் தான் நினைவுக்கு வரும். பொள்ளாச்சி நகரில், ஆங்காங்கே பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு, புதுமையான பேன்சி ரக பட்டாசுகள் விற்பனைக்கு தருவிக்கப்பட்டுள்ளன.
டிரம்ஸ்டிக், சோகோன்ஸ், டிரோன், ரெயின்போபாக், விசில் ஸ்பார்க்லர்ஸ் உள்ளிட்ட ரகங்கள், குட்டீஸ்களை மையப்படுத்தி விற்கப்படுகின்றன. அவற்றில், கையில் பிடித்து ஒளி சிந்தும் மத்தாப்பு வகை, பற்ற வைத்தவுடன் விசில் சத்ததுடன் மல்டி கலரில் மிளிரும் பட்டாசு ரகங்கள், குட்டீஸ்களை கவர்ந்துள்ளன. அதிலும், ஸ்டார் வேர்ல்டு, மெகா கிராக்கிலிங், ஜம்போ பிங்கோ, ரொட்டேட்டிங் கம்பி, தம்புள், வல்கனோ, கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட ரகங்கள், 2025ம் ஆண்டின் புது வரவு பட்டாசு ரகங்களாக உள்ளது.
இது குறித்து பட்டாசு கடைக்காரர்கள் கூறுகையில், 'தீபாவளிக்கு, 45 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆன்லைன் வாயிலாக சிவகாசியில் இருந்து பட்டாசு வாங்கி விடுகின்றனர். தீபாவளிக்கு இரு தினங்கள் உள்ள நிலையில், இங்குள்ள கடைகளில் பட்டாசு வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவர்,' என்றனர்.