/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., சார்பில் கேரம் போட்டி
/
தி.மு.க., சார்பில் கேரம் போட்டி
ADDED : ஏப் 16, 2025 10:39 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர் சங்க மண்டபத்தில், தி.மு.க., சட்ட திருத்த குழு சார்பில், தென்மாநில அளவிலான கேரம் போட்டிகள் நடைபெற்றன.
சட்ட திருத்தக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். போட்டியை, எம்.பி., ஈஸ்வரசாமி, மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டிகளில் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பரிசளிப்பு விழாவில், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதலிடம் பிடித்தவருக்கு, பரிசு கோப்பை, 25 ஆயிரம் ரூபாய்; இரண்டாமிடம் பரிசாக, 15 ஆயிரம ரூபாய்; மூன்றாம் பரிசு, 10 ஆயிரம் ரூபாய், நான்காம் பரிசு, 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசு கோப்பை, ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், நகராட்சி துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர்கள் செந்தில், மணிமாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் நன்றி கூறினார்.