/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் நகரங்களுக்கு நிவாரணம் வழங்கணும்! தி.மு.க. மாவட்ட செயற்குழு வலியுறுத்தல்
/
தொழில் நகரங்களுக்கு நிவாரணம் வழங்கணும்! தி.மு.க. மாவட்ட செயற்குழு வலியுறுத்தல்
தொழில் நகரங்களுக்கு நிவாரணம் வழங்கணும்! தி.மு.க. மாவட்ட செயற்குழு வலியுறுத்தல்
தொழில் நகரங்களுக்கு நிவாரணம் வழங்கணும்! தி.மு.க. மாவட்ட செயற்குழு வலியுறுத்தல்
ADDED : செப் 08, 2025 09:58 PM

பொள்ளாச்சி: ''கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்,'' என, தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், பொள்ளாச்சி நகர கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார்.
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் பேசுகையில், ''மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும். அதில் உள்ள குறைகளை களைந்து, விண்ணபிக்க சரியான தருணமாக உள்ளது. இதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்.
அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தவேண்டும்,'' என்றார்.
தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வரும் 17ல் கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் கோவை தெற்கு மாவட்டத்தின் சார்பில் திரளாக பங்கேற்பது, தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதி நகர, ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவின், 50 சதவீத இறக்குமதி வரி உயர்வால் திருப்பூர், கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பா.ஜ. அரசு உரிய நிவாரண நடவடிக்கைகளை துவக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் அறிக்கையில் கூறிய, 505 வாக்குறுதிகளில், தி.மு.க. அரசு, 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளது. முன்னோடியான திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.