/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துடியலூரில் தி.மு.க., பொதுக்கூட்டம்
/
துடியலூரில் தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : ஏப் 23, 2025 10:56 PM
பெ.நா.பாளையம், ; துடியலூரில் தி.மு.க.,பொதுக்கூட்டம் நடந்தது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த பொதுக்கூட்டத்துக்கு பகுதி செயலாளர் அருள்குமார் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில், சிறப்பு பேச்சாளராக திராவிட இயக்க தமிழ் பேரவை செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில்,' திராவிட இயக்க வரலாறு என்பது தமிழ்நாட்டின் கல்வி வரலாறு.
இன்று தமிழகத்தில், 36 பேர் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார்கள். இரு மொழிக் கொள்கையில், தமிழகம் உறுதியாக இருந்து மக்கள் நலனுக்காக பாடுபடும் என்றார்.
நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாவட்ட துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

