/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லாதீங்க! பறக்கும் படை குழுக்களுக்கு அதிகாரம்
/
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லாதீங்க! பறக்கும் படை குழுக்களுக்கு அதிகாரம்
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லாதீங்க! பறக்கும் படை குழுக்களுக்கு அதிகாரம்
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லாதீங்க! பறக்கும் படை குழுக்களுக்கு அதிகாரம்
ADDED : மார் 12, 2024 01:02 AM
-- நமது நிருபர் -
லோக்சபா தேர்தல் சமயத்தில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறிமுதல் செய்யவதற்கு பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பான புகார்களை கையாள்வது தொடர்பாக, இக்குழுவினருக்கு, கோவை கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதில், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
கள்ளத்தனமாக பணம் எடுத்துச் செல்வது; மதுபானங்கள் வினியோகிக்க கொண்டு செல்வது உட்பட வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் விதமான நடவடிக்கைகளை இக்குழு கண்காணிக்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் முடியும் வரை இக்குழு செயல்பாட்டில் இருக்கும்.
லஞ்சம் கொடுப்பது; பெறுவது குறித்த புகார்கள், சமூக விரோதிகள் நடமாட்டம், சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கைப்பற்றுவது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்கலாம்.
ஆதாரமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு எடுத்துச் செல்வதாக கருதி, பறிமுதல் செய்ய வேண்டும். வீடியோவில் பதிய வேண்டும்.
ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு மேல் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம், நோட்டீஸ், மதுபானங்கள் கைப்பற்ற வேண்டும்.
ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்.
நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது சொந்த உபயோகத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை எடுத்துச் செல்லலாம். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கண்டறிந்தால், வருமான வரித்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்களின் கைப்பைகளை, பெண் போலீசாரால் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

