/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழை, பலா வளர்க்க வேண்டாம்
/
தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழை, பலா வளர்க்க வேண்டாம்
தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழை, பலா வளர்க்க வேண்டாம்
தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழை, பலா வளர்க்க வேண்டாம்
ADDED : ஜன 15, 2024 10:26 PM
வால்பாறை;வால்பாறையில், யானைகள் நடமாட்டத்தை தவிர்க்க தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வால்பாறையில் பல்வேறு எஸ்டேட்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பருவமழைக்கு பின் வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானைகள் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மேலும் எஸ்டேட் பகுதியில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ள யானைகள் இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, அங்கு பயிரிடப்பட்ட வாழை, பலா, கொய்யா போன்றவைகளை உட்கொள்வதோடு, தொழிலாளர்களின் வீடுகளையும் இடித்து சேதப்படுத்தி வருகிறது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
யானைகள் நடமாட்டம் காணப்படும் பகுதியில், சுற்றுலா பயணியர் புகைப்படம் எடுக்க செல்லக்கூடாது. யானைகளை துன்புறுத்தும் வகையில் எந்த ஒரு செயலிலும் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது. யானைகள் நடமாடும் பகுதியில் எஸ்டேட் தொழிலாளர்களை தேயிலை பறிக்கும் பணிக்கு எஸ்டேட் நிர்வாகம் அனுப்பக்கூடாது. குடியிருப்பு பகுதியில் யானைக்கு பிடித்தமான வாழை, கொய்யா, பலா போன்றவற்றை வளர்க்க வேண்டாம். இதுகுறித்து, அனைத்து எஸ்டேட் நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.