/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி ஆவணம் இணைத்து டெண்டர் கோராதீர்! மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை
/
போலி ஆவணம் இணைத்து டெண்டர் கோராதீர்! மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை
போலி ஆவணம் இணைத்து டெண்டர் கோராதீர்! மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை
போலி ஆவணம் இணைத்து டெண்டர் கோராதீர்! மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை
ADDED : பிப் 05, 2024 01:16 AM
கோவை;'ஒப்பந்தம் எடுக்க தகுதியில்லாத ஒப்பந்ததாரர்கள், போலி ஆவணங்களை வைத்து டெண்டர் கோர வேண்டும்; பில் தொகை வாங்கும்போது சிக்கல் வரும்' என, மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்க செயலாளர் சந்திரபிரகாஷ் எச்சரித்துள்ளார்.
கோவை மாநகராட்சி சார்பில், ஆண்டுக்கு ரூ.2,000 கோடி மதிப்புக்கு பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. மாநகராட்சியில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள், இவ்வேலைகளை போட்டி போட்டுக்கு கொண்டு எடுக்கின்றனர். இவர்களில் சிலர், தரமின்றி பணி செய்வதாக புகார் எழுகிறது.
சில ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தம் எடுப்பதற்கு தொழில்நுட்ப ரீதியாக தகுதி இல்லாத போதிலும், போலியான ஆவணங்களை இணைத்து, ஒப்பந்தம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதுதொடர்பாக, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க செயலாளர் சந்திரப்பிரகாஷ் கூறியதாவது:
மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரும் பணிகளை, சமீபகாலமாக தகுதியில்லாத ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் கோருவதாக புகார் வருகிறது.
நெடுஞ்சாலைத்துறையில் தகுதி இல்லாதவர்களுக்கு, டெண்டர் கொடுக்கப்படுகிறது. அதை மீறி டெண்டர் கோரினாலும், அவர்களை மீறி, வாபஸ் பெற வைக்கின்றனர்.
இ-டெண்டர் கோரியிருந்தாலும், காகித வடிவில் கொடுக்கவில்லை என கூறி நிராகரிக்கின்றனர். டெண்டர் கோரும்போது, போலி ஆவணங்கள் இணைக்கக்கூடாது.
மழை நீர் வடிகால் துார்வாரும் ஒப்பந்தம் எடுத்திருப்போர், 50 சதவீதமே வேலை செய்திருப்பதாக தகவல் வருகிறது. 100 சதவீதம் 'பர்பெக்ட்'டாக வேலை செய்ய வேண்டும்.
50 சதவீதமே வேலை செய்து விட்டு, பில் எழுதியிருந்தால், விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட்டுக்கு பைல் அனுப்பி விடுவார்கள். துார்வாரும் பணிகளை முழுமையாக செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

