/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் விளக்கு ஒளிருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
மின் விளக்கு ஒளிருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 28, 2024 09:16 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அண்ணாநகர் மூன்றாவது தெரு அருகே தெருவிளக்கு ஒளிராததால் அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட, அண்ணா நகர் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் மூன்றாவது தெருவில் உள்ள தெரு விளக்கின் ஒயர்கள் அறுந்துள்ளது.
இதனால், இரவு நேரத்தில் அப்பகுதி முழுவதும் இருளாக காட்சியளிக்கிறது. மாலை முதல் இரவு வரை, அப்பகுதியினர் நடைபயணம் மேற்கொள்ளவும், கடைக்குச் செல்லவும் இந்த வழியை பயன்படுத்துகின்றனர்.
தற்போது, மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால், இரவு நேரத்தில் இந்த வழியில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மின்வாரியத்தினர் மின்விளக்கை சரி செய்ய வேண்டும், என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

