/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைக்காலத்தில் மின் கம்பங்களின் அருகே செல்லக் கூடாது; மின்வாரியத்தினர் எச்சரிக்கை
/
மழைக்காலத்தில் மின் கம்பங்களின் அருகே செல்லக் கூடாது; மின்வாரியத்தினர் எச்சரிக்கை
மழைக்காலத்தில் மின் கம்பங்களின் அருகே செல்லக் கூடாது; மின்வாரியத்தினர் எச்சரிக்கை
மழைக்காலத்தில் மின் கம்பங்களின் அருகே செல்லக் கூடாது; மின்வாரியத்தினர் எச்சரிக்கை
ADDED : டிச 04, 2024 10:22 PM
பெ.நா.பாளையம்; மழைக்காலத்தில், மின்கம்பங்களின் அருகே செல்லக்கூடாது என, மின்வாரியத்தினர் பொது மக்களை எச்சரித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், உரிய பாதுகாப்புடன் இருக்க மின்வாரியத்தினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். மழைக்காலத்தில் அறுந்து தரையில் கிடக்கும் மின் கம்பிகளால் மின்விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே ஒயர் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது.
மழை மற்றும் பெரும் காற்றால் அறுந்து விழுந்த மின் கம்பி அருகே செல்லக்கூடாது. மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மர கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். மின்சார பெட்டி அருகே தண்ணீர் தேங்கி நிற்கும் போது, அதன் அருகில் செல்லக்கூடாது. உடனடியாக மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். மின்னல் ஏற்படும்போது வெட்ட வெளியில் நிற்கக்கூடாது. கான்கிரீட் கூரையிலான வீடு போன்ற பெரிய கட்டடங்களில் தஞ்சம் அடையலாம்.
மழை நேரத்தில், மின்னல் ஏற்படும் சமயத்தில் வீட்டு உபயோக மின்சாதனங்கள் மற்றும் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது. மழைக்காலங்களில் வீடுகளில் மின் கசிவால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க ஆர்.சி.சி.பி., எனப்படும் மின் கசிவு தடுப்பான்களை பிரதான போர்டுகளில் பொருத்த வேண்டும். மின்வாரிய ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும். குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட ஈரமான அறைகளில் சுவிட்சுகளை பொருத்தக் கூடாது. ஒவ்வொரு வீட்டிலும் நிலையான, சரியான நில இணைப்பு (எர்த்) போடுவதுடன் அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து பராமரிக்க வேண்டும். வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, 3 பின் உள்ள பிளக்குகள் வாயிலாக மட்டுமே மின் இணைப்பு அளிக்க வேண்டும். மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டக் கூடாது என, எச்சரித்துள்ளனர்.