/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தகுதியில்லாத ஒன்றை பெற விரும்பக்கூடாது'
/
'தகுதியில்லாத ஒன்றை பெற விரும்பக்கூடாது'
ADDED : ஜூலை 22, 2025 06:28 AM

கோவை; கோவை ராம்நகர் அய்யப்ப பூஜா சங்கத்தில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு, கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்வு நடந்து வருகிறது.
இதில் திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு நிகழ்த்தியதாவது:
தசரதர் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதென்று தீர்மானித்தார். அவரது மனைவியர் மூவரையும் அழைத்து யோசனை கேட்கவில்லை. அதனால் தான் தனிமையில் இருந்த கைகேயி, கூனியின் பேச்சை கேட்டார்.
தர்மப்படியும், சட்டப்படியும் மூத்த குமாரனான ராமபிரானுக்குத்தான் பட்டாபிஷேகத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஆனால் கூனியின் பேச்சை கேட்டு, அவர் தசரதனிடம் வரம் கேட்டார், அந்த வரத்தை கொடுப்பதற்கு மனமின்றி தசரதர் போராடினார்.
தகுதியில்லாத ஒன்றை கைகேயி கேட்டதால் தான் பிரச்னை வந்தது.
தகுதியில்லாத ஒன்றை விருப்பமின்றி கேட்டுவிட்டாரே என்று கொடுத்தார்.
தன்னுடைய அதிகார பலத்தை வைத்து, அவர் கேட்டதால் தசரதர் கொடுத்தார். அதனால் கஷ்டத்தை தசரதர் அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நாம் இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டியது என்றால். கணவன் மனைவியோ, உறவினர்களோ, நண்பர்களோ ஒருவருக்கொருவர் பழகும் போது, தகுயில்லாத ஒன்றை பெற விரும்பக்கூடாது; அது பெரும் பிரச்னையாக மாறும். இவ்வாறு, திருச்சி கல்யாண ராமன் பேசினார்.
சொற்பொழிவு இன்றும் நடக்கிறது.