/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: வீடு வீடாக அட்சதை வழங்கல்
/
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: வீடு வீடாக அட்சதை வழங்கல்
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: வீடு வீடாக அட்சதை வழங்கல்
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: வீடு வீடாக அட்சதை வழங்கல்
ADDED : ஜன 04, 2024 11:33 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதியில், வீடு வீடாக அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழ், அட்சதை வழங்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், அயோத்தியில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்கிறது. இதற்கான அழைப்பிதழ் நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து தமிழகத்தில், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் வாயிலாக, அழைப்பிதழ், அட்சதை மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்று பகுதிகளில் வீடு வீடாக சென்று, ராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழ், ராமர் படம் மற்றும் அட்சதை தொகுப்பு வழங்கப்படுகிறது.
இந்த தொகுப்பில் உள்ள அட்சதை, ராமர் கோவிலில் இருந்து பூஜை செய்து கொடுக்கப்பட்டது. கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கும் நாளில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுவாமி படத்தை வைத்து விளக்கு ஏற்றி, வழிபாடு செய்ய வேண்டும்.