/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொங்கு மண்டலத்தில் தனியிடம் பிடித்த டாக்டர் முத்துாஸ் மருத்துவமனை
/
கொங்கு மண்டலத்தில் தனியிடம் பிடித்த டாக்டர் முத்துாஸ் மருத்துவமனை
கொங்கு மண்டலத்தில் தனியிடம் பிடித்த டாக்டர் முத்துாஸ் மருத்துவமனை
கொங்கு மண்டலத்தில் தனியிடம் பிடித்த டாக்டர் முத்துாஸ் மருத்துவமனை
ADDED : செப் 30, 2025 10:35 PM

சி ங்காநல்லுாரில் டாக்டர் முத்துாஸ் ஆர்த்தோ மருத்துவமனையும், சரவணம்பட்டியில் டாக்டர் முத்துாஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. எலும்பியல் துறை, அவசர சிகிச்சை பிரிவு, ஆர்த்ரோபிளாஸ்டி பிரிவு, ஆர்த்ரோஸ்கோப்பி மற்றும் விளையாட்டு மருத்துவ பிரிவு, முதுகுத்தண்டு சிகிச்சை பிரிவு மற்றும் கோல்டு எலும்பியல் பிரிவுகளில் சிறப்பு வாய்ந்த சிகிச்சையை அளிக்கிறது. டாக்டர் முத்து சரவண குமார் தலைமையில் இயங்கி வரும் இம்மருத்துவமனை எலும்பு மூட்டு சிகிச்சையில் இதுவரை பல சாதனைகள் படைத்துள்ளது.
10 லட்சம் எலும்பியல் நோயாளிகளை கையாண்டுள்ளது.9,200 வெற்றிகரமான முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், 6,000 இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், 5 லட்சம் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளை முத்துாஸ் டாக்டர்கள் குழு வெற்றிகரமாக முடித்துள்ளது.
விரிவான வலி மேலாண்மைத் துறையை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. கழுத்து வலி மற்றும் இடுப்பு முதுகெலும்பின் முதுகெலும்பு வட்டு பிரச்சினைகள் குறுகிய காலத்தில் சிறந்த தீர்வை கொடுக்கும் அறுவை சிகிச்சை அல்லாத சிறப்பு ஊசிகள் மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன.
வலி நிவாரண சிறப்பு பிரிவில் நவீன சிறப்பு ஊசிகள், இ பி பிளாக் , பேஸெட் பிளாக் அல்ட்ரா சவுண்ட் வழிமுறைகள் , ஓசோன் சிகிச்சை, ஹைட்ரோ டிசெக்க்ஷன், புரோலோ தெரபி, லேசர், கூல்டு ஆர் எப் (நரம்பில் ஏற்படும் வலியின் தன்மையை முழுமையாக சரி செய்யக்கூடிய கருவி) ஆகியவை முதுகெலும்பு பிரச்சினைகளுக்கு செய்யப்படும் சிறப்பு நடைமுறைகள் ஆகும்.
முழங்கால் மூட்டு தேய்மானத்தில்முதல் மூன்று நிலைகளில் நமது முத்துாஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் முழுமையான வலி நிவாரண சிகிச்சையையும், சிறப்பு வலி நிவாரண செயல்முறையுடன் முழுமையாக சரி செய்ய முடியும்.
நான்காம் நிலை மூட்டு தேய்மானத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே முழு நிவாரணம் அளிக்கும். இதில் நமது முத்துாஸ் மருத்துவமனை முதன்மையான மருத்துவமனையாக திகழ்கிறது. அதில் தற்பொழுது ரொட்டேடிங் பிளாட்பார்ம் என்ற வகையான மூட்டு - முழுமையாக மூட்டை மாற்றியமைக்காமல் மூட்டின் மேற்பகுதி மட்டும் மாற்றப்படுகிறது. சிறுவயதில் மூட்டு தேய்மானம் ஏற்படும் நபர்களுக்கு (40--50வயது) டைட்டானியம் நியோபியம் என்று சொல்லக்கூடிய கோல்டு மூட்டு 30 லிருந்து 40 வருடத்திற்கு மேல் உழைக்கக்கூடிய மூட்டு பொருத்தப்படுகிறது.
முழங்கால் மூட்டு குருத்தெலும்பு சிதைவுறும் போது தேய்மானத்திற்கும் கிழிவதற்கும், கடுமையான வலி மிகுந்த குருத்தெலும்பு புண்களுக்கு வழிவகுக்கும். இதற்கு ஹைலோ பிஆர்பி மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை நடைமுறைகள் சிறப்பான பலன்களை தருகின்றன. இங்கு முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள் பாதயாத்திரை மற்றும் பழனி, திருப்பதி படிக்கட்டுகளில் ஏறியும் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் முத்துாஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சாலை விபத்தினால் ஏற்படும் தலைக்காயங்களை சரி செய்வதற்கென்று சிறப்பான அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் தலைக் காய தீவிர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு, நவீன மயமாக்கப்பட்ட இருதய சிகிச்சை பிரிவு, மகளிர் மருத்துவம், பொது மருத்துவம் உட்பட அனைத்து துறையிலும் தலைசிறந்த டாக்டர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
தென்னிந்திய அளவில் அவசர சிகிச்சை அளிப்பதில் சிறந்த மருத்துவமனையாக டாக்டர் முத்துாஸ் மருத்துவமனை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 33 விருதுகளை பெற்றுள்ளது.மேலும் சூலுார், மலுமிச்சம்பட்டி பகுதியில் செயல்படும் முத்துாஸ் மருத்துவமனையிலும் அனைத்து அவசர சிகிச்சை பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது.