/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிப்பறையில் கேமரா வைத்த பயிற்சி டாக்டர் 'சஸ்பெண்ட்'
/
கழிப்பறையில் கேமரா வைத்த பயிற்சி டாக்டர் 'சஸ்பெண்ட்'
கழிப்பறையில் கேமரா வைத்த பயிற்சி டாக்டர் 'சஸ்பெண்ட்'
கழிப்பறையில் கேமரா வைத்த பயிற்சி டாக்டர் 'சஸ்பெண்ட்'
ADDED : டிச 03, 2024 11:58 PM

கோவை : கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், செவிலியர் கழிப்பறையில் 'பென் கேமரா' வைத்த பயிற்சி ஆர்த்தோ டாக்டர் வெங்கடேஷ், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். பயிற்சி டாக்டர் பணிபுரிந்த மருத்துவமனை, கல்லுாரிகளில் இதுபோன்று எங்காவது கேமரா பொருத்தியுள்ளாரா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், துறைரீதியாக மேற்கொண்ட நடவடிக்கையின் படி, பயிற்சி டாக்டர் வெங்கடேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, ''மாணவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்கும் வகையில், கண்காணிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பேராசிரியர்களுக்கு தெரிவித்துள்ளோம்,'' என்றார்.