விவசாயிகள் முயற்சியால் வாய்க்கால் தூர்வாரும் பணி
விவசாயிகள் முயற்சியால் வாய்க்கால் தூர்வாரும் பணி
ADDED : ஜூலை 20, 2026 04:55 AM

சூலூர்: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முயற்சியால், வாய்க்கால் தூர் வாரும் பணி நடக்கிறது.
சூலூர் சின்ன குளத்தில் இருந்து வாய்க்கால் வழியே ராமச்சந்திரா குளத்துக்கு தண்ணீர் செல்லும். இந்த வாய்க்கால் குப்பை நிறைந்து புதர் மண்டி இருந்தது. சூலூர் நகர கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முயற்சியால், அரசு துறை ஒப்புதலுடன் தனியார் பங்களிப்புடன், தூர் வாரும் பணி நடக்கிறது. வாய்க்காலில் உள்ள குப்பை மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, தூர் வாரி, ஏரிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கூறுகையில்,' வாய்க்கால் தூர் வாரும் பணியால் குளத்தில் இருந்து தண்ணீர் தடையின்றி வரும்.
வாய்க்கால் கரைகளில் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்துள்ளோம். கழிவுகளை கொட்டாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளோம், என்றனர்.
