/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாதம் ஒரு முறை தான் குடிநீர்! அப்பநாயக்கன்பட்டி மக்கள் தவிப்பு
/
மாதம் ஒரு முறை தான் குடிநீர்! அப்பநாயக்கன்பட்டி மக்கள் தவிப்பு
மாதம் ஒரு முறை தான் குடிநீர்! அப்பநாயக்கன்பட்டி மக்கள் தவிப்பு
மாதம் ஒரு முறை தான் குடிநீர்! அப்பநாயக்கன்பட்டி மக்கள் தவிப்பு
ADDED : ஏப் 14, 2025 04:35 AM
சூலுார் : சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, வாரம் ஒரு முறை பில்லூர் குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
தற்போது, மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் நடப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை என்பது மாறி, 15 நாட்களுக்கு ஒரு முறை என்றானது. தற்போது, மாதம் ஒரு முறை மட்டுமே சப்ளையாகிறது. இதனால், குடிநீருக்கு அலைய வேண்டி உள்ளது. ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் அதே நிலை தான் உள்ளது.
மக்களை திரட்டி, சீரான, தேவையான அளவு குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர் .