/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.300 கோடியில் குடிநீர் திட்டம்! மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தகவல்
/
விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.300 கோடியில் குடிநீர் திட்டம்! மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தகவல்
விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.300 கோடியில் குடிநீர் திட்டம்! மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தகவல்
விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.300 கோடியில் குடிநீர் திட்டம்! மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தகவல்
ADDED : பிப் 18, 2025 11:32 PM

கோவை; கோவை மாநகராட்சி எல்லைக்குள் விடுபட்ட பகுதிகளில், குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு, 300 கோடி ரூபாய்க்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு சிறுவாணி, பில்லுார் - 1,2,3 திட்டங்கள், வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர், குறிச்சி - குனியமுத்துார் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பழைய மாநகராட்சி பகுதியில், 60 வார்டுகளில், 24 மணி நேர திட்டத்தில் சப்ளை செய்யப்படுகிறது.
மீதமுள்ள, 40 வார்டுகளில் குடிநீர் திட்டங்கள் அமலில் இருந்தாலும், புதிதாாக நகர்கள் மற்றும் லே-அவுட்டுகள் உருவாகியிருக்கின்றன. அப்பகுதிகளில் வசிப்போருக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இணைக்கப்பட்ட வார்டுகளில், புதிதாக உருவான நகர்களில் உள்ள குடியிருப்புகளை கணக்கிட்டு, பிரத்யேகமாக தனித்திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இதற்கு, 300 கோடி ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டு உள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
குடிநீர் குழாய் உடைவதில்லை; இணைப்பு பகுதிகளில் கசிவு ஏற்பட்டு, ரோடு சேதமடைகிறது. பழைய குழாய் உள்ள இடங்களில், கனரக வாகனங்கள் செல்லும்போது, உடைந்து விடுகிறது. மண் இலகுதன்மையாக இருக்கும் இடங்களில், ரோடு இறங்கி விடுகிறது.
2024-25 நிதியாண்டில் ஒதுக்கிய 78 கோடி ரூபாய், 17 கி.மீ., மட்டுமே ரோடு போட வேண்டியுள்ளது. சூயஸ் திட்டத்தால், ரோடு போட முடியாத நிலை உள்ளது.
ரோடு தரப்பரிசோதனை
புதிதாக போடப்பட்ட தார் ரோடுகள், மூன்றாவது ஏஜன்சி மூலம் தரப்பரிசோதனை செய்யப்படும். ஏற்கனவே போடப்பட்ட ரோடு சேதமடைந்தால், மீண்டும் அதே ஒப்பந்ததாரர் மூலமே சீரமைக்கிறோம்.
காளப்பட்டி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லை. அப்பகுதியில் கணக்கீடு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளோம். குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும்.
வடவள்ளி - வீரகேரளம், துடியலுார் - கவுண்டம்பாளையம், சின்ன வேடம்பட்டி - சரவணம்பட்டி, ஒண்டிபுதுார் ஆகிய இடங்களில், பாதாள சாக்கடை திட்ட பணிகள், 2026 ஜூனுக்குள் முடிக்கப்படும். நகர் பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன் பதித்த பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றப்படும். மாநகராட்சி பகுதியில் மழை நீர் வடிகால் கட்டுவதற்கு, 1,500 கோடி ரூபாய் தேவை.
முதல்கட்டமாக, முன்னுரிமை அடிப்படையில் கட்டுவதற்கு, 170 கோடி ரூபாய் கோர இருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

