/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
17 நாளுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை
/
17 நாளுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை
ADDED : நவ 11, 2025 10:50 PM
சூலுார்: பீடம்பள்ளி ஊராட்சியில், 17 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது பீடம் பள்ளி ஊராட்சி. நடுப்பாளையம், பீடம் பள்ளி உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. இங்கு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 15 நாட்களுக்கு ஒரு முறை தான் அத்திக்கடவு குடிநீர் சப்ளை செய்யப்படுவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நடுப் பாளையம் கிருஷ்ணா நகர் பகுதி மக்கள் கூறுகையில், ''எங்கள் பகுதிக்கு, 17 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் குறைந்த அளவே வருகிறது. அதிகபட்சமாக, 15 குடங்கள் மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. குடிநீர் போதுமானதாக இல்லை. அதனால், மக்கள் குடிநீருக்காக பல இடங்களுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. வாரத்துக்கு ஒரு முறை போதுமான அளவு குடிநீர் சப்ளை செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

