/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானையால் பரபரப்பு
/
வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானையால் பரபரப்பு
வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானையால் பரபரப்பு
வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானையால் பரபரப்பு
ADDED : நவ 11, 2025 10:50 PM

பெ.நா.பாளையம்: சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, மடத்துார், பாப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகளை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு யுத்திகளை மேற்கொண்டாலும், அவர்களால் முழுமையாக யானைகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க இயலவில்லை.
நேற்று முன்தினம் வரப்பாளையம் வாத்தியார் தோட்டத்திற்குள் காட்டு யானை நுழைய முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த தோட்ட உரிமையாளர் ஜீவானந்தம் யானை இருந்தது தெரியாமல் டார்ச் லைட் அடித்தார். யானை அவரை துரத்தியது. அதிர்ஷ்டவசமாக தப்பி ஓடினார். இக்காட்சிகள் அதே பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. இதேபோல பன்னிமடை அருகே தாளியூர் வீட்டின் முன்பு நின்ற யானை, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு சென்றது. கடந்த சில நாட்களாக சின்னதடாகம் வட்டாரத்தில் காட்டு யானைகளின் வரவால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

