ADDED : அக் 23, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: பச்சாபாளையத்தில், அத்திக்கடவு திட்டத்தில், இரண்டு இடங்களில், பொது குழாய்களில், திடீரென குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்திய கம்யூ., மாவட்ட துணைச் செயலாளர் தங்கவேல் உள்ளிட்டோர், கோவை கலெக்டரிடம் 21ம் தேதி நேரில் சந்தித்து இதுகுறித்து புகார் மனு அளித்தனர். இதையடுத்து, 11 நாட்களுக்குப் பிறகு இன்று (அக்.,23) மீண்டும் இரண்டு பொதுக் குழாய்களிலும் குடிநீர் வினியோகம் துவங்கியது. நடவடிக்கை எடுத்த கலெக்டர் பவன் குமாருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.
