இன்னும் வருகிறது கலங்கிய குடிநீர் 3 இடங்களில் பரிசோதனை
இன்னும் வருகிறது கலங்கிய குடிநீர் 3 இடங்களில் பரிசோதனை
UPDATED : நவ 04, 2026 10:20 AM
ADDED : நவ 04, 2026 10:18 AM
கோவை: மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பார்கள். மாநகரில் மழை விட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் தரம் மேம்படவில்லை. கடந்த இரு வாரங்களாக பெரும்பாலான பகுதியில் குடிநீர் கலங்கலாக வினியோகமாகிறது.
சிறுவாணி, பில்லூர், கவுண்டம்பாளையம் வடவள்ளி, ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக மாநகருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
பில்லூர் அணையில் சகதி கலந்திருப்பதால் சுத்திகரிக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறினர். கலங்கல் நீரை வடிகட்டி, கொதிக்க வைத்தும் நிறமும், தரமும் மாறவில்லை. மக்கள் கேன் தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பில்லூர் அணையில் கலங்கல் அளவு 1,000 சதவீதத்தில் இருந்து 100 ஆக குறைந்துள்ளது. இப்போது 4 பம்ப்களும் இயங்குகின்றன. கலங்கல் பிரச்னை இனி படிப்படியாக குறையும். நீரின் தரம் குறித்து, பில்லூர் அணை, சுத்திகரிப்பு நிலையம், வீட்டு குழாய்களில் நீர் மாதிரி எடுத்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்புவோம். முடிவுகள் அடிப்படையில்நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
