ADDED : மே 08, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில் இருந்து, சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு அரசு பஸ் மட்டுமின்றி, தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன.
சில டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், பணியின்போது, சீருடை மற்றும் பேட்ஜ் அணிவதில்லை. மாறாக, அதிவேகமாக பஸ்சை இயக்குவது, முன்னால் செல்லும் வாகனங்களை விதிமீறி முந்திச் செல்ல முற்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இது குறித்து, பயணியர் கேள்வி எழுப்பினாலும் முறையாக பதில் அளிப்பதில்லை. விதிமீறலை கண்டறிந்து தடுக்க, துறை ரீதியான அதிகாரிகளின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

