/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 25, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மலுமிச்சம்பட்டி நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ரமேஷ், போதைப்பொருள் பழக்கத்தால், குடும்பத்தினர் மற்றும் பெண்கள் பாதிப்பது குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்துவதால், உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் பாதிப்பு பற்றியும் எடுத்துரைத்தார். கல்லுாரி முதல்வர் சு ப்ரமணியன் வரவேற்றார். சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவி வக்கீல்கள் மதிவாணன், ஸ்டெபினா ரோஸ் ஆகியோர் பேசினர்.