/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 02, 2025 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை அவினாசிலிங்கம் மனையியல் உயர்கல்வி நிறுவனம், உயிர் வேதியியல் உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் உயிர் தகவலியல்துறை மாணவிகள் சார்பில், நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம், மாதம்பட்டியில் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக, போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை, அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் சதீஸ்குமார், கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் திட்ட அலுவலர் ஷோபனா, துணை திட்ட அலுவலர் வசுந்தரா, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
எழுத்தறிவு இல்லாதவர்களுக்கான கணக்கெடுப்பு மற்றும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.