/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 24, 2025 06:24 AM
கோவை : கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஈச்சனாரி ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ரமேஷ் பங்கேற்று, போதை பொருள் பழக்கத்தால், உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கினார்.
மாணவர்களுக்கு ஏற்படும் போதை பொருள் பழக்கத்தால், அவர்களது பெற்றோர் பாதிக்கப்படுவது குறித்தும், குடும்பம் சீரழிவது தொடர்பாகவும், பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டி, கோவை இன்றியமையா பொருள் சட்ட வழக்கு சிறப்பு நீதிபதி ராஜலிங்கம் பேசினார்.
இலவச சட்ட உதவி வக்கீல் மதிவாணன், கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.