/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பில்' இல்லாமல் வலி நிவாரணி விற்பனை; மருந்துக்கடைகள் மீது தீவிர கண்காணிப்பு
/
'பில்' இல்லாமல் வலி நிவாரணி விற்பனை; மருந்துக்கடைகள் மீது தீவிர கண்காணிப்பு
'பில்' இல்லாமல் வலி நிவாரணி விற்பனை; மருந்துக்கடைகள் மீது தீவிர கண்காணிப்பு
'பில்' இல்லாமல் வலி நிவாரணி விற்பனை; மருந்துக்கடைகள் மீது தீவிர கண்காணிப்பு
ADDED : ஜூன் 12, 2025 09:59 PM
பொள்ளாச்சி; தமிழகத்தில் உள்ள மருந்துக்கடைகளில் 'பில்' இல்லாமல் வலி நிவாரண மருந்துகள் 'பல்க் ஆர்டர்' பெயரில் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்து தடுக்க, கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், முருகம்பாளையத்தில், படுக்கை வசதியுடன் கிளினிக் நடத்தி வந்த ஜோலி அகஸ்டியன், 65, என்பவரை, கடந்த மே மாதம் போலீசார் கைது செய்தனர்.
மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கிளினிக் ஒட்டிய 'ஹிமாலயா' என்ற பெயரில் செயல்பட்டு வந்த மருந்துக்கடையில் இருந்து, 'பில்' மற்றும் முறையான ஆவணங்கள் இன்றி, சிரிஞ்ச், வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகள் பெறப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த மருந்துக்கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மருந்துக் கடைகளில் 'பில்' இல்லாமல் வலி நிவாரண மருந்துகளை 'பல்க் ஆர்டர்' பெயரில் விற்கக் கூடாது; போலி மருந்து சீட்டை கண்டறிந்து தகவல் தெரிவிக்க வேண்டும்; தனியாக 'சிரிஞ்ச்' கோரும் நபர்கள் குறித்த விபரத்தை சேகரிக்கவும் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, மருந்தக ஆய்வாளர்கள், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் குருபாரதி கூறியதாவது:
மருந்துக்கடைகளில், டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி, வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது. டாக்டர் பரிந்துரை சீட்டுடன் வலி நிவாரணி விற்பனை செய்தாலும், அதற்கான 'பில்' பராமரிப்பு அவசியம்.
அதன்படி, மருந்துக் கடைகளில் விதிமீறி வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. விதிமீறல் மருந்து கடைகள் மீது, வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடை உரிமமும் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு, கூறினார்.