/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைக்கு ரயிலில் வருகிறது போதைப்பொருள்; 760 கிலோ கஞ்சா பறிமுதல்; கண்காணிப்பு தீவிரம்

ADDED : செப் 16, 2025 10:34 PM

கோவை,; கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து, போதைப்பொருட்கள் விற்பனை அதிகம் நடந்து வருகிறது.
கடத்தலில் ஈடுபடுவோர், வடமாநிலங்களில் இருந்து ரயில்களில் போதைப் பொருட்களை கடத்தி வருவது கண்டறியப்பட்டு உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.,), மாநில ரயில்வே போலீசார், கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
ஆர்.பி.எப். போலீசார் கூறியதாவது:
கோவையை கடந்து செல்லும், அனைத்து ரயில்களையும் சோதனைக்கு உட்படுத்துகிறோம். குறிப்பாக, வடமாநிலங்களில் ரயில்களில் வரும் பயணிகளின் உடமைகளை பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். 24 மணி நேரம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பாண்டு இதுநாள் வரை, 760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 1,630 போதை மாத்திரைகள், 39 கிராம் உயர் ரக கஞ்சா, 150 கிராம் எம்.டி.எம்.ஏ., உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என்பதை கண்டறிய, ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி ஆய்வு செய்யப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.