/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுபோதையில் ஓட்டிய கார் மின்கம்பம், வீட்டில் மோதியது
/
மதுபோதையில் ஓட்டிய கார் மின்கம்பம், வீட்டில் மோதியது
மதுபோதையில் ஓட்டிய கார் மின்கம்பம், வீட்டில் மோதியது
மதுபோதையில் ஓட்டிய கார் மின்கம்பம், வீட்டில் மோதியது
ADDED : மார் 18, 2025 10:25 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டியில் மது போதையில் காரை இயக்கி மின் கம்பம், வீட்டு சுவர் மீது மோதியது குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டி மின்நகர் வழியாக நேற்றுமுன்தினம் இரவு வேகமாக வந்த இன்னோவா கார், பஸ் ஸ்டாப் அருகே உள்ள திருப்பத்தில் ரோட்டோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி, அருகே உள்ள வீட்டின் மீது மோதியது.
சப்தம் கேட்டு வீட்டில் இருந்த லட்சுமி, அவரது சகோதரர் துரைசாமி ஆகியோர் அலறியடித்து ஓடினர். பொதுமக்கள் வந்து பார்த்த போது, கார், கம்பத்தின் மீதும், வீட்டின் சுவர் மீதும் மோதி நின்றதை கண்டனர்.
காரில் இருந்த மூவரும், மது போதையில் இருந்ததால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த கிழக்கு போலீசார், மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பொள்ளாச்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன், ராமச்சந்திரன், ரெஜிஸ் ஆகியோர் மதுபோதையில் இருப்பது தெரிந்தது. இச்சம்பவம் குறித்து, மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்த போலீசார், காரில் இருந்தவர்களிடம் விசாரிக்கின்றர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.