/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்த வாரம் வறண்ட வானிலையே பயிர் மேலாண்மைக்கு அறிவுரை
/
இந்த வாரம் வறண்ட வானிலையே பயிர் மேலாண்மைக்கு அறிவுரை
இந்த வாரம் வறண்ட வானிலையே பயிர் மேலாண்மைக்கு அறிவுரை
இந்த வாரம் வறண்ட வானிலையே பயிர் மேலாண்மைக்கு அறிவுரை
ADDED : பிப் 22, 2024 09:04 PM
பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தில், வரும் ஐந்து நாட்களுக்கு, வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை, 33-34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை, 21-22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அடுத்து வரும் நாட்களில், மேற்கு மண்டல பகுதிகளில், 6-12 கி.மீ., வேகமான காற்றுடன் வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. மண் ஈரத்தினை பொறுத்து, இறவை பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்து, பயிர் கழிவு மூடாக்கு செய்ய வேண்டும்.
வெப்பநிலை உயர்ந்து வருவதால், 40 நாட்கள் வயதுடைய நிலக்கடலை பயிருக்கு மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து, எக்டருக்கு, 400 கிலோ என்ற அளவில் ஜிப்சம் இட வேண்டும்.
தற்போதைய வானிலை, கோடைக்கால இறவை எள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளதால், இம்மாத இறுதிக்குள் எள் விதைப்பினை மேற்கொள்ள வேண்டும். வாழையில் பாக்டீரியா குருத்து அழுகல் நோய் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த பிளீச்சிங் பவுடரை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 20 கிராம் வீதம் கலந்து, கன்றின் அருகில் ஊற்ற விவசாயிகளுக்கு, வேளாண் பல்கலை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.