/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கி வாடிக்கையாளர்களுக்கு டி.எஸ்.பி., 'அட்வைஸ்'
/
வங்கி வாடிக்கையாளர்களுக்கு டி.எஸ்.பி., 'அட்வைஸ்'
ADDED : நவ 21, 2024 09:26 PM
வால்பாறை; வங்கி ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என, வால்பாறை டி.எஸ்.பி., தெரிவித்தார்.
வால்பாறையில், நேற்று முன்தினம் வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்த கேரளாவை சேர்ந்த நஜீப்,36, என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து, 44 ஏ.டி.எம்., கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, வால்பாறை டி.எஸ்.பி., ஸ்ரீநிதி கூறியதாவது:
வால்பாறை நகரில் உள்ள ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் யாரேனும் பணம் எடுத்து தருவதாக கூறினால், ஏ.டி.எம்.,கார்டை கொடுக்க கூடாது. சந்தேகப்படும்படி வங்கி வாசலில் யாரேனும் நின்றிருந்தால், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.
வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியிலிருந்தும் வரும் வாடிக்கையாளர்கள், கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள். பணம் எடுக்க தெரியாத நிலையில், மற்றவர்களின் தயவில் பணம் எடுக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஸ்டேட் பேங்கில், வாடிக்கையாளர்கள் நலன் கருதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போல், ஏ.டி.எம்., மையத்திற்கு காவலர் நியமிக்க வேண்டும்,' என்றனர்.