/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் மதிப்பு கூட்டும் வணிகத்தால்... கைவிடாது கற்பக விருட்சம்!இன்று 'உலக தென்னை தின' கொண்டாட்டம்
/
தென்னையில் மதிப்பு கூட்டும் வணிகத்தால்... கைவிடாது கற்பக விருட்சம்!இன்று 'உலக தென்னை தின' கொண்டாட்டம்
தென்னையில் மதிப்பு கூட்டும் வணிகத்தால்... கைவிடாது கற்பக விருட்சம்!இன்று 'உலக தென்னை தின' கொண்டாட்டம்
தென்னையில் மதிப்பு கூட்டும் வணிகத்தால்... கைவிடாது கற்பக விருட்சம்!இன்று 'உலக தென்னை தின' கொண்டாட்டம்
ADDED : செப் 02, 2024 02:11 AM
பொள்ளாச்சி;விஞ்ஞான முறையில் தென்னை வேளாண்மை செய்து, மதிப்பு கூட்டு வணிகத்தை பின்பற்றினால், கற்பக விருட்சமான தென்னை விவசாயிகளை கைவிடாது என, தென்னை ஆராய்ச்சி நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆசிய-- பசிபிக் தென்னை கூட்டமைப்பின் நிறுவன நாளான செப்., 2ம் தேதி, உலக தென்னை தினமாக கொண்டாடப்படுகிறது. இக்கூட்டமைப்பில், இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
அவ்வகையில், 'பொருளாதார சுழற்சிக்கு தென்னை அதிக மதிப்பு கூட்டு வணிகம்' என, இந்தாண்டு, உலக தென்னை தினத்தின் கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 'காமதேனு', 'கற்பக விருட்சம்' மற்றும் 'மரங்களின் சொர்க்கம்' என்று அழைக்கப்படும் தென்னை, உலகளாவிய பயிராகும்.
சாகுபடி பரப்பு எவ்வளவு?
உலகெங்கிலும், ஏறத்தாழ, 105 நாடுகளில் 12.5 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் பங்களிப்பு மட்டும், 9.0 மில்லியன் ஹெக்டேர் ஆகும். அதேபோல, இந்தியாவில், 10 மில்லியன் மக்கள், குறிப்பாக கடலோரங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிப்பதில் தென்னை பிரதான இடத்தில் உள்ளது.
நாட்டில் 2 மில்லியன் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.இந்தியாவில், தற்போது, 2.27 மில்லியன் ெஹக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி உள்ளது.
மேலும், ஹெக்டேருக்கு, 9,018 காய்களை உற்பத்தித் திறனாக கொண்டுள்ளது. இந்தியாவின், கேரளாவில், 32.9 சதவீதம், கர்நாடகாவில், 26.0 சதவீதம், தமிழ்நாட்டில் 23.5 சதவீதம் அளவில் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது.
தென்னையில் பல்துறை ஆராய்ச்சித் தொழில் நுட்பங்களை மேம்படுத்த ஆழியாரில் தென்னை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
தென்னை ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் கூறியதாவது: பொருளாதார சரிவை ஈடுகட்ட ஜாதிக்காய், கோகோ, வாழை உள்ளிட்ட ஊடு பயிர்களையும், ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தையும் பின்பற்றி அதிக லாபம் ஈட்டலாம்.
கடந்த சில ஆண்டுகளாக, சுருள் வெள்ளை ஈ தென்னையை பெரிதும் பாதித்தது. இப்பூச்சியைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
வேர் வாடல் நோயும் ஆற்றோரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கும், மேலாண்மை முறைகளைப்பின்பற்றி பாதிப்பை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேங்காய்பால் மற்றும் தேங்காய் எண்ணெயில் தாய்ப்பாலுக்கு இணையான சத்துகள் உள்ளது.
மதிப்பு கூட்டு பொருட்கள்
தமிழ்நாட்டில், தென்னையில் இருந்து சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. மேலும், நீரா, தேங்காய் பால், விர்ஜின் தேங்காய் எண்ணெய், தேங்காய் சிப்ஸ், கரித்துாள் மற்றும் தென்னை ஜெல்லி ஆகிய மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கு ஏராளமான சந்தை வாய்ப்புகள் உள்ளன.
தென்னை சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., தொழில்நுட்ப உதவியளித்து வருகிறது. 'TNAU Agri Tech Portal' என்ற தகவல் களஞ்சியத்தை விவசாயிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி, விஞ்ஞான முறையில் வேளாண்மை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.