/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டி செல்ல இ - பாஸ் கட்டாயம் பயணியருக்கு விழிப்புணர்வு அவசியம்
/
ஊட்டி செல்ல இ - பாஸ் கட்டாயம் பயணியருக்கு விழிப்புணர்வு அவசியம்
ஊட்டி செல்ல இ - பாஸ் கட்டாயம் பயணியருக்கு விழிப்புணர்வு அவசியம்
ஊட்டி செல்ல இ - பாஸ் கட்டாயம் பயணியருக்கு விழிப்புணர்வு அவசியம்
ADDED : ஆக 23, 2025 07:42 PM
மேட்டுப்பாளையம்:ஊட்டி செல்வதற்கு இ - பாஸ் நடைமுறையில் உள்ளது என, தமிழக அரசு மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலா பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கை வாகனங்கள் மட்டுமே வர வேண்டும் என்பதற்காக, இ - பாஸ் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
ஆறு மாதங்களுக்கு மேலாக இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை சோதனை செய்ய, கல்லாறு துாரிப்பாலம் அருகே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.
இந்த சோதனைச்சாவடியில், இ - பாஸ் எடுத்துள்ள வாகனங்கள் தானாக ஸ்கேன் செய்யப்பட்டு, கேட் திறந்து கொள்ளும். பாஸ் எடுக்கவில்லை என்றால் பேரிகாடு திறக்காது.
தற்போதும், இ - பாஸ் திட்டம் நடைமுறையில் உள்ளது குறித்து, வெளியூர் பயணியருக்கு தெரிவதில்லை. அதனால் பெரும்பாலான சுற்றுலா பயணியர் இ - பாஸ் எடுக்காமலேயே ஊட்டிக்கு வருகின்றனர்.
சோதனை சாவடி பணியாளர்கள் கூறுகையில், 'தினமும் ஊட்டிக்கு 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களும், விடுமுறை நாட்களில், 2,500ல் இருந்து, 3,000 வரை வாகனங்கள் செல்கின்றன.
'பெரும்பாலானோர் பாஸ் எடுத்து வருவதில்லை. இங்கு வந்து எடுப்பதால், கால விரயமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது' என்றனர்.
ஊட்டிக்கு செல்ல இ - பாஸ் அவசியம் என தமிழக அரசும், நீலகிரி மாவட்ட நிர்வாகமும் சுற்றுலா பயணியருக்கு, விளம்பரங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.