/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளுக்கு கல்வியே அடிப்படை தேவை! குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில் விழிப்புணர்வு
/
குழந்தைகளுக்கு கல்வியே அடிப்படை தேவை! குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில் விழிப்புணர்வு
குழந்தைகளுக்கு கல்வியே அடிப்படை தேவை! குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில் விழிப்புணர்வு
குழந்தைகளுக்கு கல்வியே அடிப்படை தேவை! குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 12, 2025 10:03 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் கணேசன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு விதிகளின் படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன்.
குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் எனக்கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* சேத்துமடை அண்ணா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என்பதை ஆசிரியர் மாசிலாமணி விளக்கினார். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிட மாணவர்கள் பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும் என வலியுறுத்தினார்.
* புளியம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். தொடர்ந்து, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
உடுமலை
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி அவசியம் என, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.