/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்ற கல்வி கை கொடுத்தது; ஸ்கேனர் மூலம் கார் திருட்டு : ரூட் மாறிய ஆட்டோ இன்ஜினியர் சிக்கினார்
/
கற்ற கல்வி கை கொடுத்தது; ஸ்கேனர் மூலம் கார் திருட்டு : ரூட் மாறிய ஆட்டோ இன்ஜினியர் சிக்கினார்
கற்ற கல்வி கை கொடுத்தது; ஸ்கேனர் மூலம் கார் திருட்டு : ரூட் மாறிய ஆட்டோ இன்ஜினியர் சிக்கினார்
கற்ற கல்வி கை கொடுத்தது; ஸ்கேனர் மூலம் கார் திருட்டு : ரூட் மாறிய ஆட்டோ இன்ஜினியர் சிக்கினார்
ADDED : டிச 12, 2025 07:42 AM

அன்னுார்: கோவை மாவட்டம், அன்னுார், சோமனுார் ரோட்டில் விஜயகுமார்,43. குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் 17ம் தேதி வீட்டின் பின்புறம் அவர் நிறுத்திருந்த இன்னோவா காரை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அன்னுார் போலீஸில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். நேற்று முன் தினம் அன்னுார் கீழ்கதவுகரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன், எஸ்.ஐ. அழகேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் வந்த டிப்டாப்பான நபரை சந்தேகப்பட்டு தீவிரமாக விசாரித்தனர்.
அவர் பெயர் அனில் குமார். வயது 52. திருவனந்தபுரம் சொந்த ஊர். வசிப்பது பெங்களூரில். படித்தது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் டிப்ளமோ. பிரபல கார் கம்பெனி ஒர்க் ஷாப்பில் 2 வருடம் வேலை பார்க்கிறார்.
வேலைக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கார் திருடி விற்று வந்துள்ளார். ஓ.பி.டி. 2 ஸ்கேனர் கருவியை பயன்படுத்தி சொகுசு கார்களில் பூட்டை சுலபமாக திறந்து விடுவார். தொழில்நுட்பம் தெரியும் என்பதால் திருட்டு வேலை எளிதாக இருந்தது.
இவருக்கு உதவியாளர் திருச்சி ஹரி கிருஷ்ணன், 35. திருடிய கார்களை புதுக்கோட்டை ராஜாமணியிடம் இவர் கொண்டு போவார். அவர் சேசிஸ் நம்பரை மாற்றி, விற்று பணம் கொடுப்பார். சதவீத கமிஷன் அவருக்கு.
அன்னுார் போலீசார் திருச்சி சென்று ஹரிகிருஷ்ணன், ராஜாமணியை கைது செய்தனர். அங்கு குடமுருட்டி அருகே பதுக்கி வைத்திருந்த 2 இன்னோவா உட்பட 5 கார்களை கைப்பற்றினர்.
அனில் குமார் மீது, 2021ல் கேரளாவில் ஸ்பிரிட் கடத்திய வழக்கு, 2023ல் காரமடையில் ஸ்பிரிட் கடத்திய வழக்கு மற்றும் கார் திருட்டு வழக்கு என 21 வழக்குகள் உள்ளது.
ஹரிகிருஷ்ணன் மீது 10 வழக்குகளும், ராஜாமணி மீது 6 வழக்குகளும் உள்ளது. இந்த கும்பல் தமிழகம், கர்நாடகாவில் பல இடங்களில் கார் திருடி விற்றதும் தெரிந்தது. மூவரையும் போலீசார் அன்னுார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

