/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'செல்வ மகள்' திட்டத்தில் 2,000 பேரை சேர்க்க முயற்சி
/
'செல்வ மகள்' திட்டத்தில் 2,000 பேரை சேர்க்க முயற்சி
'செல்வ மகள்' திட்டத்தில் 2,000 பேரை சேர்க்க முயற்சி
'செல்வ மகள்' திட்டத்தில் 2,000 பேரை சேர்க்க முயற்சி
ADDED : செப் 02, 2025 10:15 PM
கோவை: மத்திய அரசின் செல்வ மகள் திட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த கோயமுத்துார் சவுத் ரோட்டரி கிளப் சார்பில், கோவையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
பா.ஜ.விவசாயிகள் பிரிவு மாநில தலைவர் நாகராஜ் கூறியதாவது:
பெண் குழந்தைகளின் பெற்றோரிடம் சேமிப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். அதற்கான விழா, கோவையில் நடைபெற இருக்கிறது; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுடன் சென்று அழைப்பிதழ் வழங்கி வரவேற்றோம்.
சவுத் ரோட்டரி கிளப் முயற்சியை பாராட்டிய மத்திய நிதியமைச்சர், துவக்க நிகழ்வில் கலந்துகொள்ள இசைவு தெரிவித்துள்ளார். 2,000 பெண் குழந்தைகள் பயனடையும் வகையில், புதிதாக செல்வ மகள் கணக்கு துவக்கி வைக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.