/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
/
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
ADDED : நவ 15, 2025 10:01 PM

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதனுடன் இஞ்சி, பூண்டு தட்டி சேர்க்கவும். பிறகு அதில் அரை ஸ்பூன் மஞ்சள்துாள், மல்லித்துாள், மிளகாய்த்துாள் சேர்த்து கலக்கவும். பின்பு அதில் தக்காளி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
பின்பு அதை மிக்சி ஜாரில் மாற்றி அதனோடு தேங்காய் துருவல், சோம்பு, சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தற்போது மசாலா ரெடி. பிறகு கத்திரிக்காய் எடுத்து முழுவதுமாக வெட்டாமல் எக்ஸ் வடிவில் வெட்டி கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். பிறகு அதில் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதோடு அரைத்த மசாலா சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும். இப்போது இதில் புளி தண்ணீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அதில் பொறித்த கத்திரிக்காய் சேர்த்து லேசாக வதக்கி மூடி போட்டு ஐந்து நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். ரொம்ப டேஸ்டியான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி.

