/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதிப்பீட்டாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
மதிப்பீட்டாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூன் 07, 2025 11:43 PM
கோவை: மதிப்பீட்டாளர் சங்க, கோவை கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கோவையில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக, பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக அலுவலக துணை பொது மேலாளர் ஹரிஹரன், கவுரவ விருந்தினராக, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நிர்வாகி நவநீத கிருஷ்ணன் பங்கேற்றனர்.
அகில இந்திய மதிப்பீட்டாளர் சங்க தலைவர் தியாகராஜன், மதிப்பீட்டாளர் சங்க தர நிர்ணய குழு தலைவர் பிச்சையா ஆகியோர் பேசினர்.
2025 - 2027க்கான தலைவராக கதிர்வேல், துணை தலைவராக செல்வராஜ், செயலாளராக பாலசுந்தரம், பொருளாளராக ஜனார்த்தனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக அடைக்கலவன், சுகுமார், கிருஷ்ணகுமார், விஸ்வநாதன், ரகுராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்க உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.