ADDED : ஏப் 25, 2026 08:19 PM

கோவை: மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்கும் வகையில், தன்னார்வல அமைப்புகளின் உதவியுடன் அரசுப் பள்ளி சுவர்களில் பல வண்ணமயமான ஓவியங்கள் வரையப்படுகின்றன.
தேர்தலுக்காக பள்ளி சுவர்களின் ஓட்டுச்சாவடி எண், பாகம் எண், வேட்பாளர்கள் பட்டியல், வார்டு மற்றும் ஓட்டுச்சாவடி எண், வாக்களிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
பாதி கிழித்தும், கிழிக்காமலும் விடப்படும் சுவரொட்டிகளால், வகுப்பறைகளின் வண்ணமயமான சுவர்கள் அதன் உயிரோட்டத்தை இழப்பதாக ஆசிரியர்களும், பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் கோவை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் கூறியதாவது:
பசைகளால் வண்ண பள்ளி சுவர்கள் பாதிப்படைவதால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை. மாநகராட்சி, நகராட்சி அல்லது ஊராட்சி நிர்வாகத்தினர் தேர்தல் முடிந்தவுடன் பள்ளிக் வளாகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, சுத்தம் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
