/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 05, 2025 01:00 AM
கோவை; கோவை நகரியம், குனியமுத்துார் மற்றும் கு.வடமதுரை மின்வாரிய அலுவலகங்களில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று(பிப்.,5) நடக்கிறது.
நகரியம் அலுவலகத்தில் காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (மாநகர்) சதீஷ்குமார் பங்கேற்கிறார்.
குனியமுத்துார் அலுவலகத்தில் காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (தெற்கு) சுப்ரமணியன் பங்கேற்கிறார். கு.வடமதுரை அலுவலகத்தில் காலை, 11:30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (வடக்கு) விஜய கவுரி பங்கேற்கிறார். இந்த மின் வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட, மின் நுகர்வோர் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை நேரில் தெரிவித்து பயனடையலாம்.
இத்தகவலை, செயற்பொறியாளர்கள் பசுபதீஸ்வரன் (நகரியம்), சுரேஷ் (குனியமுத்துார்), சண்முக சுந்தரம் (கு.வடமதுரை) தெரிவித்துள்ளனர்.