/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எலக்ட்ரானிக் கழிவுகள் குவிப்பு
/
எலக்ட்ரானிக் கழிவுகள் குவிப்பு
ADDED : ஜன 18, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : 'இ - -வேஸ்ட்' எனப்படும் எலக்ட்ரானிக் கழிவுகள், பொள்ளாச்சி நகரின், திறந்தவெளியில் ஆங்காங்கே கொட்டப்படுகிறது. கழிவுகளில், மொபைல்போன் மற்றும் கம்ப்யூட்டர் சாதனக் கழிவுகள் அதிகம் காணப்படுகின்றன.
எனவே, நகராட்சிக்கு உட்பட்ட திறந்தவெளிகள், குப்பைத் தொட்டிகளில், எலக்ட்ரானிக் கழிவுகள் வீசி எறிவதை தடுக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'திறந்தவெளியில் எலக்ட்ரானிக் கழிவுகள் குவிப்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எலக்ட்ரானிக் கழிவுகளை, நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் நேரடியாக வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.