/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் துவங்கியது யானை வருகை
/
மீண்டும் துவங்கியது யானை வருகை
ADDED : ஜன 20, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : கோவை, சுந்தராபுரம் அடுத்து பிள்ளையார்புரத்தில், போலீஸ் அவுட் போஸ்ட் உள்ளது. நேற்று அதிகாலை இதனருகேயுள்ள, மோகன் நகர் பகுதிக்கு, காட்டு யானை ஒன்று வந்துள்ளது.
இதனையறிந்த, மதுக்கரை வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பிள்ளையார்புரம், மோகன் நகர் பகுதிகளில் வசிப்போர் கவனத்துடன் நடமாட, போலீசார் மூலம் அறிவுறுத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன், ரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள தனியார் நர்சிங் கல்லூரி பகுதியில் ஐந்து யானைகள் வந்துள்ளன. தற்போது ஒற்றை யானை அவ்விடத்தை தாண்டி, குடியிருப்பு பகுதிக்கு வந்தது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.