/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முருகாளி பஜாரில் யானை நடமாட்டம்
/
முருகாளி பஜாரில் யானை நடமாட்டம்
ADDED : ஜன 01, 2025 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: முருகாளி பஜாரில் காலை நேரத்தில் சென்ற யானையை கண்டு தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
வால்பாறையை சுற்றியுள்ள, பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் யானைகள் உலா வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வால்பாறை அடுத்துள்ள முருகாளி எஸ்டேட் பஜாரில், ஒற்றை யானை காலை நேரத்தில் செல்வதை, அந்த வழியாக பணிக்கு செல்ல தயாராக இருந்த தேயிலை தொழிலாளர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ரோட்டில் சென்ற ஒற்றையானை, சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்றதும், நிம்மதியடைந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு சென்றனர்.

