தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பகலில் முகாமிட்ட யானை தொழிலாளர்கள்  தவிப்பு

பகலில் முகாமிட்ட யானை தொழிலாளர்கள்  தவிப்பு

பகலில் முகாமிட்ட யானை தொழிலாளர்கள்  தவிப்பு


ADDED : செப் 29, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் ஒற்றை யானை முகாமிட்டதால், தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும் யானைகள் அதிகளவில் உள்ளன. பருவமழைக்கு பின் வன வளம் பசுமையாக காணப்படுவதால், இந்த ஆண்டும் வழக்கம் போல் யானைகள் பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.

குறிப்பாக, கவர்க்கல், தோணிமுடி, ஊசிமலை, புதுத்தோட்டம், வறட்டுப்பாறை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

இதில், புதுத்தோட்டம் தொழிலாளர் குடியிருப்பு பகுதி அருகே நேற்று காலை ஒற்றை யானை முகாமிட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘எஸ்டேட் குடியிருப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஒட்டியுள்ள பகுதியில், பகல் நேரத்தில் யானைகள் முகாமிடுவது வழக்கமாகிவிட்டது. வாகனங்களில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானைகள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us